மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை பகுதிக்கு சிறீ-ரெலோவினர் விஜயம்
மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேறியிருப்பவர்களை சிறீ ரெலோ அமைப்பினர் இன்று நேற்று (09.11.2009) நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றார். கடந்த மாதம் முதல் மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது. மன்னாரில் மழைக்காலம் ஆரம்பித்திருப்பதினால் மீள் குடியேற்றப்பட்ட மாந்தை மேற்குப்பகுதிகளில் மக்கள் சிரம்மங்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடந்த மாத இறுதிக்குள் சுமார் பத்தாயிரம் பேர் மீள் குடியேற்ம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக பிரதேசவாசிகள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் செட்டிக்குளம் மெனிக்பாம் உள்ளிட்ட நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மீள் குடியேறியிருக்கும் மக்களை சந்தித்து அவர்களது நலன் குறித்தும் தேவைகள் குறித்தும் சிறீ-ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ப. உதயராசா தலைமையிலான குழுவினர் அப்பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருப்பதோடு தேவைகள் குறித்தும் கேட்டறிந்திருக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply