இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது
இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கடைபிடித்து வந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வடக்கு இடம்பெயர் முகாம்களுக்குச் சென்று மக்களின் நிலைமைகளை பார்வையிட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 140,000 பொதுமக்களை பார்வையிட இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் யுத்தம் நிறைவடைந்த வேளையில் 300000 பேர் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 140000 மாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply