யாழ்ப்பாணம் – கொழும்பு நேரடி பஸ் சேவைகள் ஆரம்பம்
கொழும்பு -யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – கொழும்பு நேரடி பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இலங்கைப் போக்குவரத்து சபை இந்த நேரடி பஸ் சேவைகளை நடத்தவுள்ளது. இன்று காலை 8.30க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் இன்றிரவு 8.30க்கு புறக்கோட்டையை வந்தடையும். இவ்வாறு சபையின் நடவடிக்கை விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் லிவ்னிஸ் பமுனுகுல ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நேரடி பஸ் சேவைகளுக்கு சொகுசு மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பஸ்களுக்கு மதவாச்சிவரை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கொழும்பிலிருந்து செல்லும் பஸ்களுக்கு மதவாச்சியிலிருந்து இராணுவப்பாதுகாப்பு வழங்கப்படுமெனத் தெரிய வருகிறது.இதுவரை ஏ 9 வீதியூடாக பஸ் போக்குவரத்து இடம்பெற்றபோதும் அது யாழ்ப்பாணம் – வவுனியா – யாழ்ப்பாணம் என்ற வகையிலேயே நடத்தப்பட்டது. வவுனியாவுக்கும் கொழும்புக்குமிடையிலான போக்குவரத்தை பயணிகள் ரயில் மூலமே மேற்கொண்டனர். இன்றிலிருந்து இம்முறையில் மாற்றமேற்படுத்தப் பட்டுள்ளது.
யாழ் காமினி மகா வித்தியாலய மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இப்பயணிகள் போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply