அமைச்சர் ஹரினின் சகோதரியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை: ஒரு கோடி பெறுமதியான நகைகள் திருட்டு
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் சகோதரியின் வீட்டிற்குள் நுழைந்துள்ள திருடர்கள் ஒரு கோடியே 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடி சென்றுள்ளனர்.
மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்தமை தொடர்பிலான காட்சிகள் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆண் மற்றும் பெண் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என வத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply