தென் ஆபிரிக்கா புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்க இலங்கைக்கு உதவும்

புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தென் ஆபிரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என தென் ஆபிரிக்க சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் மையிட் நிகோனா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிகோனா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என புலி செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக அமைச்சர் பொகொல்லாகம சுட்டிக் காட்டியுள்ளார். எனினும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது என தென் ஆபிரிக்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply