உலகில் அதிக காரம் கொண்ட 10 மிளகாயை 31 நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த மனிதர்

உலகிலேயே அதிக காரம் கொண்ட பூட் ஜோலோகியா எனும் மிளகாயை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சாதாரணமாக உட்கொண்டு, உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது கிரெக் ஃபோஸ்டர் 30.01 நொடிகளில் சுமார் 10 பூட் ஜோலோகியா மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையின் வீடியோ கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மிளகாயை சாப்பிட்ட பின், முழுமையாக சாப்பிட்டுவிட்டேன் என்பதை வெளிக்காட்டும் வகையில் பெருமையாக நாக்கை நீட்டியும் அவர் காட்டியுள்ளார்.

அதன் பின் கிரெக்கிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கிரெக் ஃபோஸ்டர் இப்படி மிளகாய்களை சாப்பிட்டு சாதனை படைத்தது ஒன்றும் முதல் முறை அல்ல.

கின்னஸ் உலக சாதனைகளால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இவர் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு டிசம்பரில், 3 கரோலினா ரீப்பர் மிளகாயை அதிவேமாக 8.72 நொடிகளில் சாப்பிட்டு முடித்து சாதனை படைத்துள்ளார்.

அதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கிரெக்கிற்கு சிறு வயதில் இருந்தே காரமான உணவுகள் மிகவும் பிடிக்குமாம். ஏன் வீட்டிலேயே மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறாராம். பல தசாப்தங்களாக காரமான உணவுகளை உட்கொண்டு, அதை சகித்துக் கொள்ளும் திறன் உள்ளது. தற்போது இவரால் உலகின் மிகவும் காரமான மிளகாயையும் சாப்பிட முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply