கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை, காற்று : 45 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்ட மக்கள் தொகையில் 90 வீதமான மக்கள் அங்கு தொடர்ந்து பெய்யும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசுவமடு, உடையார்கட்டு பகுதிகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

மரம் முறிந்து விழுந்தும், வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டும் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கடும் மழையுடன் காற்று வீசுவதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வசிப்பிடங்களை இழந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

விசுவமடு, பிரமந்தனாறு, தர்மபுரம், கல்மடு, புளியம்பொக்கணை, கண்டாவளை, முரசுமோட்டை, இராமநாதபுரம் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சின் உதவியோடு இவர்களுக்குச் சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply