சீசன் டிக்கெட் இரத்து; மாணவர்களுக்காகக் குரல் கொடுத்த சஜித்
“வார இறுதி நாட்களில் பயன்படுத்துவதற்கு இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குமாறும்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட சீசன் டிக்கெட்டானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கை போக்குவரத்துச் சபையானது 66 ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்நிலையில், ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீசன் சீட்டுக்களின் செல்லுபடித் தன்மையை இரத்துச் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தீர்மானித்துள்ளார்.
மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் மேலதிக வகுப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் இப்புதிய நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வது தவறு. எனவேஉடனடியாக இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply