மனிதநேயப் பணிகளுக்கு நன்றி
போஸ்டோ மற்றும் மனித உரிமைகள் இல்லம் நிறுவனங்கள் எமது வன்னி மாணவர்களுக்கு ஆற்றிய மனித நேய பணிக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறோம். நெருக்கடியான நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவிகள் மிகவும் பெறுமதியாக கை கொடுத்துள்ளன. தமது கல்வியைத் தொடருவதற்குரிய முதலீடாகவும் நம்பிக்கையாகவும் காணப்படுகிறது. மாணவர்களது தேவையறிந்து தாமாகவே முன்வந்து சேசவையாற்றுகிற மனிநேய அமைப்பக்கள் எமது மாணவர்களுக்கு உதவி வருகின்றன. இந்த வகையில் அண்மையில் போஸ்டோ நிறுவனம் மற்றும் மனித உரிமைகள் இல்லம் என்பன மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளன.
எமது வன்னி மாணவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து கல்வியைத் தொடர பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். எந்த வருமானமும் வருகையுமற்ற மாணவர்களான இவர்களுக்கு உரிய உதவிகளை பல்கலைக்கழக நிருவாகமும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஏற்பாபடு செய்து வருகிறது. மாணவர்களுக்கான மிக அவசரமாக தேவைப்படுகிற நிதியினை வழங்குவதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிதியத்திற்கு புலம்பெயர் உறவுகள் உதவியள்ளனர். புலம்பெயர்ந்த எமது உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறோம். அத்துடன் தொடர்ந்து எமது உறவுகளிடம் இந்த தார்மீக உதவியை எதிர்பார்க்கிறோம்.
மனிதாபிமான உதவிகளை எமது மாணவர்களுக்கு வழங்கிய போஸ்டோ மற்றும் மனித உரிமைகள் இல்லத்தின் மனிதநேயப் பணி மேலும் விரிவடையவும் மாணவர்கள் மற்றும் எமது மக்கள் பயனுறவும் வாழ்த்துகிறோம். எமது மாணவர்களின் உன்னதமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நன்றி
இவ்வண்ணம்
பா.பிரதீபன்
செயலாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.
யாழ் பல்கலைக்கழகம்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply