உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா
ஹைப்பர்சோனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.சக்திவாய்ந்த மற்றும் கடினமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை வடகொரியா மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அதன் முதல் இராணுவ உளவு செயற்கைக் கோளை ஏவியதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
பசிபிக் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகலின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறனை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
நேற்று பியோங்யாங் பகுதியில் இருந்து மதியம் 2:55 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஈவுகணையானது நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 1,000 கிமீ வரை சென்றதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
இதேநேரம் இந்த ஏவுகணை பரிசோதனை நடவடிக்கை ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை மீறுவதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதேநேரம் இந்த ஏவுகணை சோதனை அச்சுறுத்தல் அல்ல என்றும் வட கொரியாவின் ஆயுதத் திட்டத்தின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply