நாட்டின் சில பகுதி மக்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் முடிந்தால் முகக்கவசம் அணியுமாறும் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இந்த நிலை படிப்படியாக குறைந்து இன்னும் சில நாட்களில் காற்றின் நிலை வழமைக்கு திரும்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply