தமிழ்ப் பகுதிகளை கட்டியெழுப்பும் பணியில் புலம்பெயர்ந்தோர்: யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பாக புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடவிருக்கின்றனர்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் இந்தக் கல ந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி நடுப்பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.
அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலம் வாழும் டாக்டர் நடேசன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இதற்கான அழைப்பை அமைச்சர் விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்களுக்கு வருகைதரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கு தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன் தலைமையிலான ஒரு தூதுக்குழு கடந்த காலங்களில் இலங்கை வந்து ஜனாதிபதியின் ஆலோசகர், அமைச்சர்கள், எம்.பிக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply