துணுக்காய் – கிளிநொச்சி, யாழ்-மன்னார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்குவரத்து பணிகளுக்காக, துணுக்காய்க்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான பேருந்து ஒன்று நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜெயவர்தன மற்றும் துணுக்காய் பிரவு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பிரதேசங்களில் 8000 பொது மக்கள் வரையில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில், தற்போது மாங்குளம், முழங்காவில், அக்கராயன்குளம் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களுக்கு 5 பேருந்து சேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிகப்பட்டிருப்பதாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான அதிகாரி தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து நாளாந்தம் காலை 6 மணிக்கு மன்னாரி அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்று இச்சேவையில் ஈடுபடும்.மன்னாரில் இருந்து புறப்படும் பஸ் வவுனியா சென்று சோதனை நடவடிக்கைகளின் பின் ஏ 9 வீதியூடாக நேரடியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிக்கும் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையின் 3 பிரதிகளை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 20 வருடங்களின் பின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 வீதியூடான நேரடி போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply