2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார்; சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டது.
ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அறிகையில், புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள்.
புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார். யார் மீது குற்றம் கூறுவதற்காக தான் இதனைக் கூறவில்லையெனத் தெரிவிக்கும் அவர், ராஜீவ் காந்தியின் கொலை ஈழ விடுதலைப்போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது எனவும், 2005 ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வந்த போதும், அதை பிரபாகரன் எட்டி உதைத்து தவறான காரியம் செய்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகள் அவசரமாக எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப்பார்த்து மௌனமாக அழுவதாகவும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply