மீள்குடியேற்ற செயற்பாட்டுக்கு மேலும் ரூ. 75 கோடி: குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 75 கோடி ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி குறைநிரப்பு பிரேரணையை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சர்ப்பித்துப் பேசினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசும் போது:-

எமது அமைச்சு இடம்பெயர் ந்துள்ள மக்களின் நலன்களை அடிப் படையாகக் கொண்டு செயற்படுகின்றது.

வடபகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் 21 நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

என்றாலும் அரசாங்கத்தின் துரித வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

இவர்கள் 12 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர். இவர்களும் விரைவில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர்.

இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்குடியமர்த்தும் போது 25 ஆயிரம் ரூபா வழங்குகின்றோம்.

அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குரிய உலர் உணவு, விவசாயம், மீன்பிடித் தொழில் என்பவற்று க்கான உதவிகளும் வழங்கப்படுகின் றன.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் சொந்த இடங்களில் மீளக்குடியமரக் கூடிய வாய்ப்பு 19 வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை யிட்டு வட மாகாண முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட வவுனியா முஸ்லிம்கள் ஏற்கனவே அவர்களது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply