நலன்புரி கிராமங்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை
இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான இச்சந்திப்பு நேற்று முன்தினம் பாராளுமன்றக் கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதற்கான விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் வீடுகள் இல்லாதவர்களுக்கு 3,25,000 ரூபா பெறுதியான வீட்டினை அமைத்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்ப ட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ கூறிய தாக கூட்டமைப்பு எம். பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் இடம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகளையும் கண்டறிந்தனர்.
நலன்புரி நிலையங்களில் நிலவும் பால்மா மரக்கறி தட்டுப்பாடு குறித்து பசில் ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் முகாம்களிலுள்ள வர்களை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்க் கூட்டமைப்பினரின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட பசில் ராஜபக்ஷ யுனிசெப் நிறுவனத்துடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு பால்மா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண் டுள்ளார். அத்துடன் போதிய மரக்கறிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழி செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் வீடுகட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் மீள் குடியேறியவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் கொடுப் பனவு ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளதாக கிஷோர் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவுடனான மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக் கலநாதன், அரியநேந்திரன், டொக்டர் வில்லியம் தோமஸ், என். ஸ்ரீகாந்தா, வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை கூட்டமைப்பு எம். பிக்கள் குழுவொன்று நேற்றைய தினம் இரத்மலானையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துள்ளது.
அவர்களின் கல்வி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கக் கூடிய தொழிற் பயிற்சிகள் சம்பந்தமாக இச்சந்திப்பின் போது அவர்களுக்குப் பொறுப்பாளராகவுள்ள மேஜர் தயாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கிஷோர் எம்.பி. தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply