தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி நடத்துவதில் சிக்கல் இல்லை: ஜே. வி. பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் இணைந்து கொண்டு ஆட்சி நடத்துவதில் சிக்கல் இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு அமைக்கும் ஆட்சியில் அங்கம் வகிப்பதில் சர்ச்சைகள் தோன்றாது என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி நாட்டில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்படும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான வேட்பாளர் ஒருவரை நியமித்து அதன் மூலம் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதனைத் தவிர வேறும் வழி எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய அரசியல் கட்சியொன்றை ஜே.வி.பி உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியல் கட்சி தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகிய போதிலும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக தமக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொதுவான வேட்பாளருக்கு அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் ஆதரவு வழங்குவார்கள் என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவான வேட்பாளருக்கு முழு இலங்கை வாழ் மக்களும் ஆதரவினை வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீளவும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கத்திற்காக அமைச்சரவையின் அமைச்சர்கள் சிலர் பொதுவான வேட்பாளருக்கு ஆதரவளிப்பது திண்ணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply