யேர்மனி லீப்ஜிக் விலங்ககத்தில் குரங்கு திருடப்பட்டது

கிழக்கு யேர்மனியில் உள்ள லீப்ஜிக் விலங்ககத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை குரங்கு ஒன்று திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. லீப்ஜிக் விலங்ககத்தில் உள்ள ஊழியர்கள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று விலங்குகளின் அடைப்புகளை ஆய்வு செய்தபோது சிங்கவால் மக்காக் குரங்கு (Lion-tailed macaque) காணாமல் போனதைக் கண்டுபிடித்தனர்.

விலங்ககத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் குரங்கைத் திருடுவதற்கு பொறிகள் பயன்படுத்தப்பட்டமைக்கு தெளிவான அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிப்பட்டது.

ரூமா என்ற பெண் மக்காக் குரங்குகள் வயது பதினைத்து. சிங்கவால் மக்காக்கள் அழிந்து வரும் இனமாக கருதப்படுகிறது.

இக்குரங்கின் தோற்றமும் வாலும் சிங்கம் போல் காட்சியளிப்பதால் இதற்கு சிங்கவால் மக்காக் குரங்கு என அழைக்கப்படுகிறது.

குரங்கு திருடப்பட்டபோது அதனுடன் இருந்த யெனூர் என்ற ஆண் மக்காக் குரங்கு அங்கே இருந்தது. அது தற்போது எதுவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது.

லீப்ஜிக் விலங்ககம் அமைந்துள்ள சாக்சோனி மாநிலத்தில் குரங்கு வியாபாரம் அல்லது திருட்டு குறித்து விசாரணை குறித்து காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

திருட்டு சம்பவத்தையொட்டி, உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

லீப்ஜிக் விலங்ககத்தின் இயக்குனர் ஜோர்க் ஜுன்ஹோல்ட் மக்காக் திருட்டை கெட்ட செய்தி என்று அழைத்தார். திருட்டுக்குப் பின்னால் உள்ள நோக்கம் எங்களுக்குத் தெரியாது என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் எனப்படும் தென்னிந்தியாவில் உள்ள மலைத்தொடரில் சிங்கவால் மக்காக் குரங்குகளின் பூர்வீக இருப்பிடமாக உள்ளன.

தற்போது சில ஆயிரம் குரங்குகள் மட்டுமே இக்காடுகளில் எஞ்சியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காடழிப்பு காரணமாக அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.

மக்காக் குரங்குள் இறைச்சி மற்றும் ரோமங்கள் காரணமாக வேட்டையாடும் அபாயத்தில் உள்ளன.

இந்த இனங்கள் சில நேரங்களில் வேட்டைக்காரர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக தேடப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply