மக்களுக்குகாக மீண்டும் அவ்விடத்திற்கு வருவேன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

நான் சரியான திசையிலேயே எனது பயணத்தை முன்னெடுத்திருக்கின்றேன். அந்த வகையில் இங்குள்ள இயற்கை வளமான சுன்னக்கல்லை பயன்படுத்தினால் அது எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் ஆகவே இன்று இந்த அளவீட்டு பணிகளை சில மக்கள் விரோத அரசியல் கட்சிகளின் தூண்டலுக்கு ஏடுபட்ட சிலர் மதுபோதையுடன் குழப்பத்தை ஏற்படுத்தி தடுத்திருந்தாலும் எனது முயற்சி தொடரும். மீண்டும் இதே இடத்திற்கு நான் வருவேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இன்று பொன்னாவெளி கிராமத்தில் கணியவள மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களங்களின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகளை நேரில் பார்வையிடச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இடைநடுவில் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு உண்மையை அறியாமல் விசமிகளின் தூண்டலுக்கு ஏடுபட்டவர்களையும் , போதைப்பொருள் பாவனையாளர்களையும் ஏவிவிட்டு சிலர் மக்களுக்கு துரோகம் செய்தனர்.
இதனால் அவ்விடத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடக் கூடிய நிலைமை இருக்கவில்லை.


அதைத்தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து வெளியேறியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அந்த பிரதேசம் சுன்னக்கல் நிறைந்த பிரதேசமாகும். அதனால் அங்கே நிலத்தடி நீர் உவர் நீராக உள்ளது. சுன்னக்கல் அகழ்வு அங்கே நடைபெற்றால் அந்த இடங்களில் மழை நீரை தேக்கி நிலத்தை பாதுகாக்க முடியும். அத்துடன் நன்னீரை சேமிக்க முடியும்போது அந்த நீரை அங்கு விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். இவ்வாறு பல நல்ல திட்டங்கள் இதில் உள்ளன.


இவ்வாறான நல்ல திட்டங்களும் , மக்களுக்கு பொருளாதார உயர்வும் கிடைத்துவிடக்கூடாது. என்று கருதி மக்களை தொடர்ந்து கையேந்திகளாக துயரத்தில் வைத்திருப்பதன் ஊடாகவே தமது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்படும் மக்கள் விரோதிகளே இந்த குழப்பத்தின் பின்னால் மறைமுகமாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply