அவமானகரமான பிரேரணையை மீளப்பெற செய்தோம்:சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு ஏற்படும் பல பேரிடர்களை களைய ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘மக்கள் அரண்’ வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது  பங்கேற்புடன் நேற்று (6) குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் பெண் பிள்ளைகளின் உடலுறவுக்கான வயதெல்லையை 16 இல் இருந்து 14 ஆக குறைத்துள்ளது. 

பெண் ஆண் பலாத்காரத்தையும் ஒன்றாக இணைத்து பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பிடத்தை மறுத்து, 22 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதன் விளைவாக இந்த அவமானகரமான பிரேரணையை அரசாங்கம் வாபஸ் பெற நேரிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் ஆரோக்கியத் துவாய் குறித்து பேசியதற்காக 2019 இல் தான் கேலி செய்யப்பட்டாலும், 5 ஆண்டுகளாக தொடர்ந்து இது குறித்து பேசி வந்தேன். 

இது குறித்து பாராளுமன்றத்தில் பேசும் போது, ​​சிரித்தனர், கேலி செய்தனர், சமூக வலைதளங்கள் மூலம் சேறுபூசினர், என்றாலும் தொடர்ந்து உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தியதன் விளைவாக பாடசாலை மாணவிகளுக்கு இலவச ஆரோக்கியத் துவாய் வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

எந்தவொரு கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply