கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்கல் என்பது உறுதி: சர்வதேச உதவி கோரியுள்ள இலங்கை
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அண்மையில் இனந்தெரியாதோரால் முடக்கப்பட்டிருந்தது. தற்போது, சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம் காண சர்வதேச உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply