சீன அரசின் உதவியுடன் உலகிலேயே மிகவும் பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணம்

அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளை திட்டமிட்டபடி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்தின் முதற் கட்டமாக சுமார் 800 ஹெக்டேயர் அளவிற்கு நிலத்தை சீர் செய்யவுள்ளதாகவும் உலகிலேயே மிகவும் பெரிய விமான ஓடுதளம் கொண்டதாக ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த நிதியினை சீன அரசாங்கம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் எதிர்வரும் 2011ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தின் நிர்மானப் பணிகள் முடிவடைவதோடு அந்த வருடத்திலேயே விமான சேவைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply