இத்​தா​லி​யில் தந்தை-​மகன் கைது: மும்பை தாக்​குத​லில் தொடர்பு

மும்பை தாக்​குத​ல் சம்​ப​வத்​தில் தொடர்​பு​டைய தீவி​ர​வா​தி​க​ளுக்கு பணப் பரி​மாற்​றம் செய்​த​தாக பாகிஸ்​தான் நாட்​டைச் சேர்ந்த தந்தை-​மகனை இத்​தா​லி​யில் போலீ​ஸார் சனிக்​கி​ழமை கைது செய்​த​னர். வடக்கு இத்தாலி பகு​தி​யான பிரே​சி​யா​வில் வெளி​நாட்டு பணம் மாற்​றும் நிறு​வ​னம் நடத்தி வந்த முக​மது யாகூப் ஜன்​ஜூவா ​(60), ஆமீர் யாகூப் ஜன்​ஜூவா ​(31) ஆகி​யோரை போலீ​ஸார் வெள்​ளிக்​கி​ழமை கைது செய்​த​னர். இவர்​கள் தந்தை-​மக​னா​வர்.

​கைது​ செய்​யப்​பட்​ட​வர்​கள் இரு​வ​ரும் மும்​பை​யில் 2008 நவம்​பர் 26ம் தேதி நடை​பெற்ற தாக்​குத​லில் ஈடு​பட்ட தீவி​ர​வா​தி​க​ளுக்கு தங்​க​ளின் நிறு​வ​னம் மூலம் பணப்​ப​ரி​மாற்​றம் செய்​தது தெரி​ய​வந்​துள்​ளது.

​மும்பை தாக்​கு​த​லுக்கு பின்​னர் இணை​ய​தள கணக்​கு​கள் மூலம் தீவி​ர​வா​தி​க​ளுக்கு இரு​வ​ரும் பணம் வழங்கி உத​வி​ய​தாக பிரே​சியா நகர தீவி​ர​வா​தி​கள் தடுப்​புப் பிரிவு போலீஸ் உய​ரதிகாரி ஸ்டெ​போனா போன்ஸி தெரி​வித்​தார்.

​அமெ​ரிக்க புல​னாய்வு அமைப்​பின் தக​வ​லுக்கு பின்​னர் கடந்த டிசம்​பர் மாதம் முதல் இத்​தா​லி​யில் போலீஸார் உஷார்​ப​டுத்​தப்​பட்​ட​னர். மேலும் சர்​வ​தேச தீவி​ர​வா​தி​க​ளுக்கு இத்​தா​லியி​லி​ருந்து பணப்​ப​ரி​மாற்​றத்​திற்கு உத​வும் நபர்​க​ளை​யும் கண்​கா​ணிக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.

​இதை​ய​டுத்​து​தான் முறை​கே​டான பணப்​ப​ரி​மாற்​றம் செய்த தந்தை-​மகன் கைது செய்​யப்​பட்​டுள்ள​னர்.

​ஏற்​கெ​னவே இந்​திய அரசு போது​மான ஆதா​ரங்​களை இத்​தா​லிக்கு வழங்​கிய பின்​பு​தான் தீவி​ர​வா​தி​க​ளுக்கு உத​வி​ய​வர்​கள் சிக்​கி​யுள்​ள​தாக தில்லி வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.

​இது​மட்​டு​மின்றி கடந்த சில வாரங்​க​ளுக்கு முன்பு அமெ​ரிக்க புல​னாய்வு அமைப்​பி​ன​ரால் கைது செய்​யப்​பட்ட டேவிட் கோல்​மேன்,​ ரானா ஆகி​யோ​ரு​டன் தொடர்​புள்ள கூட்​டா​ளி​கள் பலர் தேடப்​பட்டு வரு​கி​றார்​கள்.

​ இத்​தா​லி​யில் பிடி​பட்​ட​வர்​க​ளுக்கு கோல்​மே​னு​டன் ஏதே​னும் தொடர்பு உள்​ளதா என​வும் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கி​றார்​கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply