சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்: எஸ். பி. திஸாநாயக்க

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்பதால் எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால் தான் பதவி விலக நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க உள்ளிட்ட சில கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்னர்.

ஜெனரல் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நியமிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக் கூடும் என எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க நேரிடும் அல்லது அரசியலிலிருந்து ஓய்வு பெற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சியாளர்களினால் ஆட்சி முன்னெடுக்கப்படும் நாடுகளில் எவ்வாறான ஓர் நிலைமை காணப்படுகின்றது என்பதனை தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் தீவிரம் காட்டப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல ஆங்கில வார இதழொன்றுக்கு எஸ்.பி. திஸாநாயக்கவின் நெருங்கிய பாராளுமன்ற நண்பர் ஒருவர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில வேளைகளில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆட்சியில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளருக்கு ஆதரவளிப்பதனைவிடவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது சாலச் சிறந்ததென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply