ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாளை இரவு அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அத்தேர்தலுக்கான திகதியை நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்று கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 14 ஆம் திகதியாக இருக்கும் என்றும் ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 24 ஆம் திகதி (நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை) விசேட அரசியல் தகவல் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசியல் கொள்கை அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல், ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடத்தப்படுகிறது என்பதற்கான விளக்கமான காரணங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.
ஜனாதிபதி மஹிந்தவின் பதவிக் காலத்தில் அவர் ஈட்டிய வெற்றிகள், மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்ட செயல்திட்டங்களின் அமுல், அவற்றால் கிடைத்த நடைமுறை வெற்றிகள், மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்பன விரிவாக பரப்புரை செய்யப்படும்.
அத்தோடு ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்களையும் அந்தச் செய்தித் தகவல் அறிக்கை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply