அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்னெடுத்தால் சுதந்திரக்கட்சியுடன் இணையத் தயார்: த.தே.கூ. யாழ். நகர சபை உறுப்பினர் மு. ரெமீடியஸ்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னெடுத்த அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்னெடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை ஜனாதிபதி வழங்கும் பட்சத்தில் நான் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன். இந்த தீர்வு நடைமுறைப் படுத்தப்பட்டால் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசியம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன் இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட மு. ரெமீடியஸ் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை வலியுறுத்தி மொனராகலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மரதன் ஓட்டம் ஓடி வந்த எச்.ஜி.சைமன் மற்றும் வீரர்களை பாராட்டி யாழ் மாநகரசபையில் சனிக்கிழமை (21.11.2009) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போர் சூழலால் சமாதான நோக்கம், அதற்கான சூழல் எல்லாம் தகர்ந்து போய்விட்டன. இந்த ஆயுதப்போர் முடிந்து விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது உண்மையே. எனினும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply