இலங்கையின் வடக்கு கிழக்கை மாகாணங்களை இணைப்பதற்கு இணக்கம்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் இலங்கையின் வடக்கு, கிழக்கை மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது, இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இணக்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அடிப்படையாக வடக்கு, கிழக்கு மாகணங்கள் இணைக்கப்ட்டு தனியான ஒரு அலகாக மாற்றப்படுவது அவசியமாகின்றது.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தின் கீழ் இணைக்கப்பட்ட இந்த இரு மாகாணங்களும் 2006 ஆம் ஆண்டு நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டன.
எனினும் அவற்றை ஜனாதிபதிக்கான விசேட அதிகாரங்கள் மூலம் நாடாளுமன்றத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நிரந்தரமாக இணைக்குமாறு, இந்தியா ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கை தனித்தனியாக வைத்துக் கொண்டு அரசியல் தீர்வினை முன்வைக்க முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவுள்ளது.
வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி விட முடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுகின்றது.
இதனை பிராணப் முகர்ஜி தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு இணங்கினால்,வரும் தேர்தல்களில் இந்தியாவின் ஆதரவு ராஜபக்சவிற்கு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தனது தேர்தல் வெற்றிகளை பாதிக்கும் என்பதால், தேர்தல்கள் முடிந்த பின்னர் அவற்றை இணைப்பதாக ராஜபக்ச, இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளதாகவும் அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply