புலிகளின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது : ரணில்

மும்பாயில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகளால் மாத்திரம் ஒழிக்கமுடியாது எனத் தெரிவித்தார். 
 
பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகளால் மாத்திரம் ஒழிக்கமுடியாது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாவும் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

பயங்கரவாதம் இராணுவ ரீதியாகக் கையாளப்பட்டு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிய சம்பவகள் பலநாடுகளில் நடத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், நேபாளத்தில் பயங்கரவாதம் அரசியல் ரீதியாகக் கையாளப்பட்டதாலேயே அங்கு சமாதானம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது

இதேவேளை, மும்பாயில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கமும் கண்டித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

இதனைப் போன்றே இலங்கையில் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குற்றச்சாட்டினார்.

அத்துடன், இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம நம்பிக்கை வெளியிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் இந்தியாவிடம் உதவிக் கரம் நீட்டியுள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்களுக்கு மத்திய அரசாங்கம் ஒருபோதும் உதவிசெய்யாது என நாங்கள் கருதுகிறோம்” என வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு சென்னையிலிருந்தே அவர்களுக்குத் தேவையான எரிபொருள்களை கடத்திவருவதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், இதனைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் மும்பாயில் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கும் தாக்குதல்களை ஜே.வி.பி.யும் கண்டித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply