சிறீ-ரெலோவினர் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தனர்.

வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை கடந்த வாரம் சிறீ-ரெலோவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். துணுக்காய், மல்லாவி, மாங்குளம் போன்ற இடங்களில் மீள்குடியேறியோர்களின் குற்றம், குறைகளை கேட்டறிந்தனர். ’இவ்வளவு விரைவில் தமது சொந்த இடத்தில் குடியேறுவோமென கனவிலும்  நாம் நினைத்து இருக்க வில்லை’’ என சிலர் தமது மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தனர்.  

தமது போக்குவத்திற்கு மேலாதிக பஸ் சேவைகளை ஏற்படுத்தி வசதிகள் செய்து தரும்படி கோரியுள்ளனர். தங்கள் வாழ்விடங்களை புனரமைக்கும் நடவடிக்கையில் முன்முரமாக இருக்கும் அவர்கள், அதற்கு ஆரம்பர நடவடிக்கையாக துப்புரவு செய்வதற்கு மண்வெட்டி, கோடரி, கத்தி, போன்றவை பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்தனர். உள்ளூர் நடமாட்டத்துக்கு அவசியமான துவிச்சக்கர வண்டி ஒவ்வொரு குடும்பத்தும் ஒன்று தந்துதவுமாறும் கோரியுள்ளனர்.

அவர்களது கோரிக்கையை அரசின் உரிய மட்டங்களுக்கு எடுத்துச் சென்று உடன் அவைகளை பெற்றுத் தருவதாக சிறீ-ரெலோ செயலாளர் உதயன் அம்மக்களுக்கு உறுதியளித்தார். இந்த விஜயத்தில் சிறீ-ரெலோ செயலாளர் உதயனுடன் மூத்த உறுப்பினர்களான சேனாதி, ஜானி ஐரோப்பிய தொடர்பாளர் சங்கர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
 



 

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply