புலிகள் மீதான தடையை இந்தியா நீக்காது

 புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது வருடாந்த உரையில் ‘இந்தியா புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் பேசியது குறித்து கேட்ட போது, புலிகள் மீது இந்தியாவினால் விதிக்கப்பட்டுள்ள தடையில் மாற்றங்கள் ஏற்படாதென ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட கொள்கை வகுப்பாளரொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நீண்டகாலமாக தொடரும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் நிலையான தீர்வினை எட்ட முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். 1992ல் இந்தியாவில்தான் முதன் முதலாக புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டது.

இந்தியா வன்முறையை பிரதான ஆயுதமாக பயன்படுத்தும் புலிகள் மீதான தடையை நீக்காது. இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படும் சாத்திய மில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply