முல்லைத்தீவு- துணுக்காய் பகுதியில் நான்காயிரம் ஏக்கரில் விவசாயம்
முல்லைத்தீவு- துணுக்காய் பகுதியில் நான்காயிரம் ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கு நேற்று (செப். 25) தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நேற்று துணுக்காயில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இரண்டாயிரம் குடும்பங்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் காணி வீதம் பெற்றுக்கொடுக்கப்படுமென முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பத்துப் பெரிய குளங்களும், 19 சிறிய குளங்களும் புனரமைக்கப்படவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, விவசாயிகளுக்குப் பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக வங்கிகளும் முன்வந்து ள்ளன. நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்
இது இவ்வாறிருக்க மாந்தை மேற்குப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்து வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழ ங்கியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா, கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரிகளின் இணக்கத்துடன் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.
துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அரச அதிபர், பாடசாலைகள், வங்கிகள், தபாலகங்கள் உட்பட அரச நிறுவனங்கள் பலவும் இயங்கத் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply