வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே கூட்டமைப்பின் முடிவு
ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தன் பிறகே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட எம்.பியான பா. அரியநேத்திரனே இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு;
ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே உறுதிப் படுத்தப்பட்ட வேட்பாளராகவுள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
”சரத் பொன்சேகாவைத் தமது தரப்பில் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக ஜே.வி.பி. அறிவுத்துள்ளது. ஆனால், சரத் பொன்சேகா அவரது முடிவை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்பார் என்று கூறியுள்ளார். மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. அக்கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது வேறு ஒருவரா என்பது இன்னும் தெரியாது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் ஒன்றிணைந்து சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்தவுள்ளன என்றும் கூறப்படுகின்றது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்வரை வேட்பாளர் தொடர்பில் உறுதிசெய்ய முடியாதுள்ளது.
ஆகவே, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்புதான் வேட்பாளர்கள் நூறு வீதம் உறுதி செய்யப்படுவர். இதன் பிறகுதான் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று எமது கூட்டமைப்பு முடிவு செய்யும். வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வேட்பாளர்கள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைக்கும் தீர்வுத்திட்டங்களை ஆராய்ந்து பார்த்தே நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வருவோம்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply