மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு மகஜர்

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச துறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்றய தினம் (26.11.2009) முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்து சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக அரச துரைகளில் எதுவித வேலைவாய்ப்புக்களும் இல்லாது அவதிப்படுவதாக தெரிவித்து தமக்கான வேலைவாய்ப்பபை உடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றனர்.

மன்னார் மாட்ட செயலகத்தின் முன் காலை பத்து மணியளவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் சுமார் முப்பதிற்கும் அதிகமானோர் சார்பாக ஜனாதிபதிக்கான மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியவர்கள் பதவியேற்று இதுவரையில் சுமார் 42,000 பேரிற்கு அரச நியமணங்களை வழங்கியிருக்கின்றமை பாராட்டப்படவேண்டியது என தெரிவித்திருக்கும் வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமணங்களையும் வழங்குவதங்கு அதி மேதகு ஜனாதிபதியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மகஜரில் கேட்டுள்ளனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ். மோகனாதன் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதிக்கு அணுப்பி வைப்பதாக உறுதியளித்திருக்கின்றார்.


மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply