ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான் அரசு

விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்து பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், அந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும், ஹிஜாப் சட்டங்களையும் கடுமையாக்கியது.

இதனிடையே, துருக்கி விமான நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வருகிறது இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிசாருக்கு தெரியவந்தது

விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்ற ஈரான் பொலிசார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply