எமது கோரிக்கைகளை ஏற்றால் அரசுடன் சேர்ந்து செயற்பட முஸ்லிம் காங்கிரஸ் தயார் : எம்.ரி ஹஸனலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் இணைந்து செயற்படுகிறோம். எமது கோரிக்கைகளை ஆட்சியிலிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்நிரக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால் ஆளும் கட்சியுடன் நாம் சேரத் தயாராகவுள்ளோமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி ஹஸனலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் சேரப் போவதாக வெளியான செய்திகள் குறித்து லங்கா ஈ நியூஸ் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சேர்ந்தே செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுவது குறித்துக் கேட்டபோது, அது ஒரு தவறான கருத்து என்றும் இறுதியாக நாம் ஆளுந்தரப்பிலிருந்துதான் வெளியேறினோமென்றும் கூறினார்.
எமது கோரிக்கைகளையேற்று அவற்றை நிறைவேற்றுவதாக ஆளும் தரப்புப் தெரிவித்தால் மீண்டும் அரசுடன் சேர்ந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம்.
முஸ்லிம்களுக்குத் தனியாக அலகு ஒன்றினை உருவாக்குதல்.
அம்பாறை மாவட்டத்தின் மூன்று தமிழ்த் தொகுதிகளை உள்ளடக்கியதான ஒரு தனி மாவட்டத்தை ஏற்படுத்தல்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது தனித்தரப்பாகக் கலந்து கொள்ள வாய்ப்பளித்தல்,
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னர் அனைத்து இனமக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றின் ஊடாகக் குடியேற்றங்களைச் செய்தல் போன்ற தமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் நிறைவேற்றுமானால் நாம் அரசுடன் சேரத் தயாhரகவுள்ளோமென்றும் ஹஸன் அலி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply