மீள் குடியேறிய மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
மன்னார் மாந்தை மேற்கில் மீள் குடியேறிய மக்களின் உள்ளக போக்கு வரத்துகளுக்காக படைத்தரப்பினர் துவிச்சக்கர வண்டிகளை இன்று (30.11.2009) வழங்கியிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாந்தை மேற்கில் மக்களுக்குத தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொருட்டு அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
சிறீ-ரெலோவினர் கடந்த வாரம் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்த போது உள்ளூர் நடமாட்டத்துக்கு அவசியமான துவிச்சக்கர வண்டியை ஒவ்வொரு குடும்பத்தும் ஒன்று தந்துதவுமாறும் கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கில் மீள் குடியேறியவர்களின் உள்ளக போக்குவரத்துகளை இலகுபடுத்தும் பொருட்டு மன்னார் படைத்தரப்பினர் 300 துவிச்சக்கர வண்டிகளை இன்று முதற்கட்டமாக கையளித்திருக்கின்றனர்.
மன்னார் 215வது படைப்பிரிவின் சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான கேணல்தர அதிகாரி நலிந்த வின் ஏற்பாட்டில் அடம்பன் பாடசாலையில் துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது.
இன்று இடம் பெற்றிருக்கும் நிகழ்வில் மீள் குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியூதின், இராணுவ உயரதிகாரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட ஏராளமான பொது மக்களும் கலந்நு கொண்டிருக்கின்றனர்.
கடந்த கால யுத்த சூழ்நிலையை அடுத்து தற்போது மாந்தை மேற்குப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் இயல்பு நிலை வழமைக்கு திரும்பத்தொடங்கியிருக்கின்றது.
அடம்ன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் அரச அலுவலகங்களின் ஊழியர்கள் சுகாதார துரையினர் மற்றும் பொதுமக்களுக்கு இவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply