பிற்போக்குவாதிகளை தோற்கடித்து ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம்: சிறீ ரெலோவின் செயலாளர் நாயகம் ப. உதயராசா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தெடுப்பதோடு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் முற்போக்குச் சக்திகளை வெற்றி பெறச்செய்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்’ என சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ ரெலோ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிறீ ரெலோவின் செயலாளர் நாயகம் ப. உதயராசா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஐக்கிய இலங்கையின் தேசிய சுதந்திரத்தின் பின்னரான ஆறு தசாப்தங்களுக்கு மேலான காலகட்டத்திலே தற்போது போல அரசியல் ரீதியாக மிகவும் விறுவிறுப்பானதும், முக்கியமானதுமான காலகட்டம் வேறெப்போதுமே தோன்றியதேயில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற்போக்குவாதிகளை தோற்கடித்து, நாடு அந்நிய நிழல் காலனியத்தில் வீழ்ந்து விடாது காப்பாற்றுவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply