வவுனியாவில் சகல வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானம்

வவுனியாவில் சகல வசதியும் கொண்டதான விளையாட்டு கட்டட தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கு 25 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி வவுனியா நகர சபைத் தலைவரிடம் கேட்டுள்ளார்.

நீர் தடாகம் உட்பட சகல விளையாட்டு வசதிகளும் இங்கு ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளார்.

நிலம் ஒதுக்கித்தரப்படும் பட்சத்தில் கட்டட நிர்மாணத்திற்குரிய நிதி வழங்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு காணியை பெறுவது பற்றி தீர்மானிக்கப் படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply