ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் முடிவு
சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றி தமிழரசுக் கட்சி பரிசீலிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் நேற்று (28.07.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஒகஸ்ட் மாதம் 10 ,11 ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும்.
எமது கட்சியைச் சேர்ந்தவரின் கருத்துக்கு வியாக்கியானம் வழங்குது சரியான விடயம் அல்ல. எனினும், இன்றைய காலச் சூழல் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும்.
அதனை விட்டு ஒற்றுமையைக் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தால் அடிப்படை அரசியலைக் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply