ஐ.ரி.என். மூலம் விரைவில் தமிழ் ஒளிபரப்பு.
நாட்டில் இராணுவச் சட்டத்தின் மூலம் ஊடகத்துறை கட்டுப்படுத்தப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் 6000 ஊடகவியலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40க்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கே சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தின் போது ஊடகத்துறை அமைச்சர் பாக்கீர் மாக்காருடன் இணைந்து இரண்டு வருடங்கள் கடமையாற்றினேன். அந்தக் காலக்கட்டத்தில் அமைச்சருக்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை.
நாட்டின் ஊடக நிறுவனங்களின் தலைமை உத்தியோகத்தர்களுடன் ஜனாதிபதி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கலந்துரையாடல் நடத்தி வருகின்றார். ஊடக அடக்கு முறை இடம்பெறுவதாக இந்த சந்திப்புக்களின் போது எவரும் எதுவம் தெரிவிக்கவில்லை. முன்னரை விட தற்போது கூடுதல் சுதந்திரம் இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவரின் சகோதரர்கூட தெரிவிக்கின்றார்.
சுயாதீன தொலைக் காட்சிச் சேவை மற்றும் லக்ஹன்ட வானொலி பக்க சார்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் அந்த சேவைகளை புறக்கணிக்கவில்லை. தரப்படுத்தலில் செய்தி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் முதலாவது இடத்துக்குத் தெரிவாகியுள்ளது. அதன்படி நாட்டில் கூடுதலான மக்கள் அந்த தொலைக்காட்சிச் சேவையைப் பார்க்கின்றனர்.
சுயாதீன தொலைக்காட்சி விரைவில் தமிழ் மொழி மூல சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த காலங்களில் சில தொலைக்காட்சி சேவைகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் தொலைக்காட்சிச் சேவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply