ரணில் ராஜபக்சாக்களுடன் இணைந்து போட்டியிடவேண்டுமா? கருத்துக்கணிப்பில் 76 வீதமானவர்கள் எதிர்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை என கருத்துக்கணிப்பொன்றில் பங்கெடுத்த 76 வீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். டெய்லிமிரர் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துகொண்டவர்களை பசில் ராஜபக்ச விமர்சித்துள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க ராஜபக்சக்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவேண்டுமா என்ற டெய்லிமிரரின் கேள்விக்கு கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 1645 பேரில் 76 வீதமானவர்கள் இணைந்துபோட்டியிடுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
21வீதமானவர்கள் ஆம் என தெரிவித்துள்ள அதேவேளை 3வீதமானவர்கள் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply