17 தடுப்பு முகாம்களில் உள்ள 11,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு

கடந்த மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்த யுத்தம் 11,000 புலி உறுப்பினர்களை தடுப்பு முகாம்களுக்குள் கொண்டுவந்தது. அவர்களில் 2,000க்கு அதிகமானவர்கள் பெண்கள் ஆகும். இவர்கள் அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வழி செய்யவுள்ளதாக தேர்தல் திணைக்கள ஆணையகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்ட மீளாக்க அமைச்சு போன்றனவற்றுடன் இணைந்து தேர்தல் திணைக்கள ஆணையம் தடுப்பு முகாம்களில் உள்ள 11,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2005 ஜனாதிபதி தேர்தலில் வன்னி மக்களின் வாக்களிக்கும் சந்தர்ப்பதை இழந்திருந்ததால் இம்முறை தேர்தலில் வன்னி மக்கள் தன்னை மீள்தேர்வு செய்ய இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களென ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், 3 நிரந்தர முகாம்களிலும் 14 தற்காலிக இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பயன்படுத்த தேர்தல் திணைக்களம் வாய்ப்பளிக்க முன் வந்திருப்பது குறிப்பிடக் கூடிய ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply