மத்திய வங்கி ஆளுநர் மற்றும் விமானப்படை தளபதிக்கு நோட்டீஸ்: தகவல்களை வழங்க மறுப்பு

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் விமானப்படை தளபதியிடம் “அத“ செய்தித்தாளின் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி கோரியிருந்த விபரங்களை வழங்காத காரணம் தொடர்பில் அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை பதவி வகித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் பல்வேறு அதிகாரகளுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை ஊடகவியலாளர் கோரியிருந்தார்.

எனினும், இலங்கை மத்திய வங்கி குறித்த தகவல்களை வழங்கவில்லை.

இது தொடர்பில் தகவல் ஆணைக்குழு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் தகவல் அதிகாரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரை ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி தகவல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற Air tattoo 2024 கண்காட்சியின் செலவுகள் மற்றும் வருகை தரும் அரசியல் தலைவர்களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதால் ஏற்படும் செலவுகள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை விமானப்படையிடம் கோரப்பட்டிருந்தது.

விமானப்படையின் தகவல் அதிகாரி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் அந்த தகவலை வழங்க மறுத்ததால் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக “அத” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply