இலங்கை கடற்பரப்பில் விபத்து இந்திய மீனவர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்போது, ஏற்பட்ட விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது, கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இன்று வியாழக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை மீனவர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது விபத்திற்குள்ளாகியுள்ளதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
ஏனைய மூவரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, காணாமல்போன மீனவரை தேடும் நடவடிக்கையிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டவேளை இலங்கை கடற்படை மாலுமி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply