பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சகல வசதிகளுடனும் குறித்த கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும் தோட்ட மக்களை சமூகமயப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply