மக்கள் விடுதலை முன்னணிக்குள் உட்பூசல்?

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதையடுத்து அக்கட்சிக்குள் உட் பூசல் தோன்றியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடமிருந்து மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்துள்ளதுடன் கடந்த 30ம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பங்கேற்கவில்லை.

அவர் திடீரென வெளிநாட்டுக்கு பயணமாகியதன் காரணமாகவே இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் பிரசார நடவடிக்கைகளை கூடிய வரை தவிர்த்துக் கொள்ளவே இவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து ராஜினாமா செய்துள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திருமதி பிரியங்கா கொதலாவல கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளதையடுத்து மத்திய செயற்குழுவின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply