அம்புலன்ஸில் சிறிலங்கா இராணுவ அதிகாரியின் இழி செயல்
1990 என்ற அம்புலன்ஸில் விபத்தின் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நோயாளியுடன் வந்த தாதியை தகாத முறைக்கு உட்படுத்தி காவல்துறை அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹொரண கந்தானை பல்லாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேகநபரின் சகோதரர் காயமடைந்து அம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் போது சந்தேகநபரான இராணுவ சார்ஜன்ட் நோயாளியின் உதவியுடன் நோயாளர் காவு வண்டியில் சென்ற தாதியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சுகாதார உதவியாளர் காவல் நிலைய அதிகாரியிடம் கூறியதையடுத்து, சந்தேக நபர் காவல் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, காவல்துறை குழுவொன்று அங்கு சென்று சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்துள்ளது.
சந்தேக நபரும் காயமடைந்த அவரது சகோதரரும் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர் பனாகொட இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்தவர் சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் ஹொரணை தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply