வேட்பாளர்களின் எண்ணிக்கை 30 ஐ அண்மித்தது: நிதி வழங்க தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடுகள் 100 கோடி ரூபாயை தாண்டவில்லை. தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் பணம் மீதம் உள்ளது.

அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் உள்ளன. செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன்ன பின்னர் நிதி வழங்கப்படும் ” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 28 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதியை செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

மேலதிகமாக செலவிடுவதற்காக பொது மக்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply