ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் வாக்குச்சீட்டின் உயரம் சுமார் 27 அங்குலமாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒரே வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக வாக்காளரின் பெயர்களும் அவர்களின் இலட்சினைகளும் அச்சிடப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஒரே வாக்குச்சீட்டாக அச்சிடுவதா அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கங்காணி லியோனுக்கே கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply