உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை அதிகாரிகளுக்கு சட்ட மற்றும் விசாரணை ஆதரவை வழங்குவதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் பொறுப்புக்கூறும் இலக்கை அமெரிக்கா பகிர்ந்துகொள்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply